நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இன்றைய சிந்தனை

முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 21வது வாரம் புதன்கிழமை
2016-08-24இறைவனைக் கண்டுகொள்வோம்

இன்று நத்தனயேல் என்று அழைக்கப்பட்ட திருத்தூதர் பர்த்தலோமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். திருச்சபையை ஒரு கட்டடத்திற்கு ஒப்பிட்டால், இயேசு அதன் மூலைக்கல்லாகவும், திருத்தூதர்கள் அதன் அடிக்கற்களாகவும் இருப்பர். இன்றைய முதல் வாசகம் திருச்சபையைப் புதிய எருசலேம் என்று அழைக்கிறது. அதனை “ஆட்டுக்குட்டி மணந்துகொண்ட மணமகள்” என்றும் குறிப்பிடுகிறது. கடவுளின் மாட்சி விளங்கும் அந்தத் திருநகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று ஆண்டவர் இயேசுவால்...

இறை இரக்க ஆண்டில் திருமலை ஆயரின் தலைமையில் சிறப்புடன் நடைபெற்ற கேவலார் அன்னையின் பெருவிழா 13-08-2016புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து யேர்மனி தேசத்தில் கேவலார் திருப்பதியில், இலங்கை மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காக வேண்டுதல் செய்யும் பெருவிழா இவ்வாண்டும் 13.08.2016 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரகடனப்படுத்தப்பட்ட இரக்கத்தின் ஜூபிலி ஆண்டில் „உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்“(லூக்கா 6:36) என்ற தொனிப்பொருளில் இம்முறை இத்திருவிழா நடைபெற்றது. [2016-08-15]


அமெரிக்கக் கண்டத்தின் யூபிலி ஆண்டு கொண்டாட்டம்இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கான இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாட்டங்கள் இம்மாதம் 27 முதல் 30ம் தேதி வரை கொலம்பிய தலைநகரில் இடம்பெற உள்ளன. அமெரிக்க கண்டத்தின் அனைத்து திரு அவைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ள... [2016-08-23 01:59:00]சமூகத்தை மாற்றியமைத்த இரு கத்தோலிக்கருக்கு விருதுபங்களாதேஷ் கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில், முதல்முறையாக. இரு பொதுநிலை விசுவாசிகளுக்கு, "Pro Ecclesia et Pontifice" என்ற திருத்தந்தையின் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. பங்களாதேஷ் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் டாக்டர் Benedict Alo D'Rozario, மறைந்த நீதிபதி Promod... [2016-08-23 01:46:19]மெத்தடிஸ்ட் கிறிஸ்தவசபை கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்திஇத்தாலியின் டூரின் நகர் அருகே இடம்பெற்றுவரும் வல்தேசி மெத்தடிஸ்ட் கிறிஸ்தவசபைகளின் மன்றக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், அனைத்துக் கிறிஸ்தவர்களும்... [2016-08-23 01:37:12]

11ஆண்டில் காலடி பதிக்கும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் வண பிதா அ.விகரர்.சோசை அடிகளார்10ஆண்டுகள் வெற்றிகரமாக குருமுதல்வர் பணியை நிறைவு செய்து 11ஆண்டில் காலடி பதிக்கும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் வண பிதா அ.விகரர்.சோசை அடிகளார். 10ஆண்டுகள் வெற்றிகரமாக குருமுதல்வர் பணியை நிறைவு செய்து 11ஆண்டில் காலடி பதிக்கும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் வண... [2016-08-21 10:10:05]மடு திருத்தலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஆவணித்திருவிழாமன்னார் மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர்... [2016-08-15 23:45:53]

இந்தியாவில், கடுமையான சிறார் தொழில் சட்டத்திற்கு வரவேற்புஇந்தியாவில் சிறார் குழந்தை தொழில்முறைக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்தும் நோக்கக்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டச் சீர்திருத்தத்தை, திருஅவை அதிகாரிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

இச்சட்டச் சீர்திருத்தம் பற்றி UCA செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் தொழில் பணிக்குழு... [2016-08-09 00:04:06]கோவில்களைக் காக்க மும்பை கத்தோலிக்கர் போராட்டம்அண்மையில் வெளியிடப்பட்ட மும்பை பெருநகர முன்னேற்ற திட்ட வரைவில், கத்தோலிக்க கோவில்களும், அவற்றைச் சார்ந்த இடங்களும் தவறுதலாகக் குறிக்கப்பட்டுள்ளன, அல்லது விடப்பட்டுள்ளன என்று, மும்பை நகர கத்தோலிக்கர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

திட்ட வரைவில் குறிக்கப்படாத கோவில்கள் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்டவை... [2016-08-09 00:00:00]

சர்வதேச இளையோர் தின மாநாடு பற்றி ஒரு கண்ணோட்டம்சர்வதேச இளையோர் தினம் எவ்வாறு உருவானது என்று பார்த்தால், 1984 ம் ஆண்டு மீட்பின் புனித ஆண்டாக திருத்தந்தை புனித 2 ம் அருளப்பர் சின்னப்பரால் பிரகடனப்படுத்தப்பட்ட போது, பரிசுத்த திருத்தந்தை புனித 2 ம் அருளப்பர் சின்னப்பர் இந்நிகழ்வை சிறப்பிக்க குருத்து ஞாயிறு அன்று புனித பேதுரு சதுக்கத்தில் அணிதிரளுமாறு உலகளாவிய ரீதியில் இளையோருக்கு அன்பான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். திருத்தந்தையின் அழைப்பை ஏற்று 300,000 க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் அணிதிரண்டு வந்திருந்ததை பார்த்து மகிழ்ந்த திருத்தந்தை [2016-07-18 23:06:33]

எழுத்துருவாக்கம்:சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDBஇறைவன் உன்னை அழைக்கிறாரா?இறை இரக்கத்தின்ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆண்டிலேயே எமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேவ அழைத்தலைப்பற்றி கூறும் போது இவ்வாறு கூறுகின்றார்: திருச்சபையானது இரக்கத்தின் இல்லம் ஆகும், இந்த மண்ணில்தான் தேவ அழைத்தல்கள் வேரூன்றப்பெற்று, முதிர்ச்சியடைந்து நற்கனிகளை கொடுக்கின்றது. [2016-04-16 00:21:08]

எழுத்துருவாக்கம்:சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

Lobpreis


2016-08-24

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

நம்பிக்கை


2016-08-24

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2016-08-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களிடம், உங்களிடையே வருகை தந்துள்ளேன், இதன்மூலம் நான் உங்கள் நலனுக்காக அவரிடம் வேண்டிக் கொள்வேன். எனக்குத் தெரியும் உங்களில் ஒவ்வொருவருக்கும் கவலைகள் உண்டு, சோதனைகள் உண்டு, ஆகவே தாயாக உங்களை அழைக்கிறேன், எனது மகனின் திருவிருந்துக்கு வாருங்கள். அவர் உங்களுக்காக அப்பத்தைப் பிட்பார், அவராகவே உங்களுக்கு அதைத் தருவார், அவர் உங்களுக்கு நம்பிக்கையைத் தருவார். அவர் உங்களிடம் மேலும் விசுவாசத்தை, நம்பிக்கையை மற்றும் உற்சாகத்தைத் தேடுகின்றார்....
2016-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நீங்கள் தவறிச்செல்வதை நான் பார்ப்பதுடன், உங்கள் இதயத்தில் செபமோ அல்லது மகிழ்வோ தெரியவில்லை. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்திற்குத் திரும்புவதுடன் மனிதருக்கு அல்லாது இறைவனுக்கு முதலிடம் கொடுங்கள். நான் உங்களுக்கு எடுத்து வரும் நம்பிக்கையை இழக்காதிருங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இந்த வேளையில் நீங்கள் ஒவ்வொரு நாளும் இதயத்தில் அமைதியுடன் இறைவனை மென்மேலும் தேடிக்கொள்ளுங்கள், செபியுங்கள், செபியுங்கள், செபம் உங்களுக்கு மகிழ்வைத் தரும்வரை செபியுங்கள். நன்றி, நீங்கள்...
2016-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் உண்மையாக உங்கள் மத்தியில் வந்துள்ளது உங்களை மகிழ்விக்கும் ஏனென்றால் இது எனது மகனின் மிகுந்த அன்பால் நிகழவது. அவர் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார், இதன்மூலம் நான் உங்களுக்கு அன்னையின் அன்புடன் பாதுகாப்பு வழங்குகிறேன், இதன்மூலம் நீங்கள் வேதனை மற்றும் மகிழ்வு, துன்பம் மற்றும் அன்பு போன்றவற்றை விளங்கிக்கொண்டு உங்கள் ஆன்மாவில் அவற்றை மிக ஆழமாகப் பதித்துக்கொள்வதுடன், நான் உங்களை மீண்டும் புதிதாக அழைக்கும்போதெல்லாம், இயேசுவின் இதயம்,...


இரக்கத்தின் ஆண்டு
08/12/2015-20/11/2016

திருவெளிப்பாட்டு ஆண்டு 2015/2016

29/11/2015-26/11/2016


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

ETR வானொலியில் யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் வானொலி நிகழ்வு

தினமும் காலை 7:45மணி முதல் 8:05 மணி வரை

இவ் நாளந்த நற்சிந்தனை எமது இணையத்தில் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரை உங்கள் ஆசீர்வாத்ததிற்காக ஒலிபரப்பாகின்றது. கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் அறிவியுங்கள்.

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)