நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இன்றைய சிந்தனை

திருவழிபாடு ஆண்டு - A பொதுக்காலம் 12வது வாரம் ஞாயிற்றுக்கிழமை
2017-06-25அஞ்சவா, வேண்டாமா?

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்றார் திருவள்ளுவர். அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டாம். அஞ்சத் தேவையற்றவற்றைக் கண்டு துணிவுடன் நிற்க வேண்டும். இது ஒரு அறிவுடைமை. இது ஒரு ஞானம். இந்த ஞானத்தைக் கற்றுத் தருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். உடலைக் கொல்வோருக்கு அஞ்ச வேண்டாம். பண பலம், படை பலம், ஆள் பலம் கொண்ட மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம். மாறாக, இறைவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டாம். நமது மனச்சான்றின் குரலுக்கு அஞ்ச வேண்டும். ஏழை, எளியோரின் வயிற்றெரிச்சலுக்கு அஞ்ச...

மனித வர்த்தகத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு திருப்பீடம்மனித வர்த்தக அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளவர்களை, அச்சூழலிலிருந்து விடுவிப்பதற்கு, இயலக்கூடிய எல்லாவித வாய்ப்புக்களையும் பயன்படுத்தவேண்டியது அவசியம் என, திருப்பீட அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் கூறினார். மனித வர்த்தகத்தை ஒழிப்பது குறித்த உலகளாவிய செயல்திட்டம் பற்றி, வருகிற செப்டம்பரில் நடைபெறவுள்ள உயர்மட்ட கூட்டத்திற்குத்... [2017-06-25 01:24:55]இளையோரை இனிமேலும் கொலை செய்ய வேண்டாம்வெனிசுவேலா நாட்டில், தற்போது நிலவும் ஒரு சூழலைப் போன்ற வருங்காலத்தில், நம்பிக்கை வைக்காததே, அந்நாட்டு இளையோர் செய்யும் பெரும் பாவம் என்று சொல்லி, இளையோரைக் கொலை செய்ய வேண்டாமென, கடவுள் பெயரால் விண்ணப்பிப்பதாக, அந்நாட்டு ஆயர்கள் கவலையுடன்... [2017-06-25 01:14:17]‘தென் சூடானுக்குத் திருத்தந்தை’ புதிய பிறரன்பு நடவடிக்கை“தென் சூடானுக்குத் திருத்தந்தை” என்ற புதிய பிறரன்பு நடவடிக்கை குறித்து, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் தலைமையிலான குழு, இப்புதனன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது. தென் சூடானில், இரண்டு மருத்துவமனைகள், ஒரு... [2017-06-23 01:16:09]

குருக்களுக்கான செபமாலை பவனி,உலக குருக்கள் இணையத்தின் அனுசரணையுடன், காலி மறைமாவட்டம் ஏற்பாடு செய்திருக்கும், குருக்களுக்கான செபமாலை பவனி மாத்தறையில் உள்ள மாத்தறை மாதா திருத்தலத்தில் இம்மாதம் 23/06/2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்து குருக்களையும் அன்புடன் அழைத்து... [2017-06-22 20:36:26]20 ஆண்டுகளை நிறைவுசெய்யும், மிருசுவில் பங்கின் பங்குத் தந்தைஇன்றைய தினம் 20.06.2017 தனது குருத்துவ வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவுசெய்யும், மிருசுவில் பங்கின் பங்குத் தந்தை அருட்பணி சேவியர் ஜேம்ஸ் அவர்களின் பணிவாழ்வுக்காக இறைவனிடம் வேண்டி,வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். [2017-06-20 22:18:57]

கோவா உயர் மறைமாவட்டத்தில் பாத்திமா அன்னை விழாபாத்திமாவில் அன்னை மரியா காட்சி கொடுத்த புதுமையின் 100ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, இந்தியாவின், கோவா-டாமன் உயர் மறைமாவட்டம், முனைப்புடன் ஏற்பாடுகளை செய்துவருவதாக அறிவித்துள்ளது.

1917ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி முடிய அன்னை... [2017-06-23 00:53:36]உத்திரப்பிரதேசத்தில் சேதமாக்கப்பட்ட கல்லறைத் தோட்டம்கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்ற பொய் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, உத்திரப்பிரதேசத்தில், கிறிஸ்தவக் கல்லறை தோட்டம் ஒன்று, வன்முறையாளர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

தலித் மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொணரவேண்டும் என்ற நோக்கத்துடன், உத்திப்பிரதேசத்தின் தற்போதைய முதல்வரால், 2002ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'இந்து யுவவாஹினி'... [2017-06-23 00:44:03]

பணியகத்தின் புதிய மலர்கள்அன்புநிறை பெற்றோரே! பெரியோரே!
இவ்வாண்டு முதன்நன்மை பெற்ற உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள் போன்றோரின் நிழற்படங்கள் தொடுவானம் பத்திரிகையில், "பணியகத்தின் புதிய மலர்கள்" பகுதியில் வெளி வர வேண்டுமென்று விரும்பினால் இன்றே அனுப்பி வையுங்கள். இன்னும் ஒரு சில இடங்களே உள்ளன. உடனேயே அனுப்பி வையுங்கள். இதற்காக எந்தக் கட்டணமும் அறவிடப்படுவதில்லை. [2017-06-16]


யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் திருத்தலங்களை நோக்கிய புனித யாத்திரை - 2017ஆண்டவர் இயேசு தனது அன்னையாகிய பரிசுத்த கன்னி மரியாளை பத்திமாவிற்கு அனுப்பி உலகிற்கு தனது நற்செய்தியை அறிவித்து, 100 ஆண்டுகள் பூர்த்தியாகும் இந்த ஆண்டில், ஆண்டவர் இயேசுவின் ஆசீரையும் அன்னை மரியாளின் பரிந்துரைகளையும் பெறும் படி, யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியம் திரு யாத்திரைகளை ஏற்பாடு செய்துள்ளது. கேவலார் அன்னையின் திருவிழாவிற்கு அடுத்த வாரம், இவ் திரு யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதே வேளை ஒக்டோபர் மாத இறுதியில் ஆண்டவர் இயேசு பிறந்து, வாழ்ந்து, எமக்கு மீட்பை பெற்றுத் தந்த இஸ்ராயேல் தேசத்தை நோக்கிய பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் இரு புனித யாத்திரைகளிலும், யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் இயக்குனர் அருட்பணி.நிரூபன் தார்சீசியஸ் அவர்களும் கலந்து எல்லா புனித தலங்களிலும் வழிபாடுகளை நெறிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. [2017-06-16]


சிலுவையின்றி கிரீடமா...இன்றைய மனிதர்களுக்கு பிடிக்காத வார்த்தையும், விரும்பாத பொருளும் ஒன்று இருக்கிறது என்றால் அது சிலுவையாகத் தான் இருக்க முடியும். ஒருமுறை ஒருவர் என்னிடம் வந்து கழுத்தில் அணிந்து கொள்வதற்கு ஒரு சுருபம் கேட்டார். அப்பொழுது என்னிடம் சிலுவை வடிவில் உள்ள டாலர் மட்டும் தான் இருந்தது. உடனே நானும் அவருக்கு சிலுவை வடிவில் இருந்த அந்த சுருபத்தை கொடுத்தேன். அதற்கு அவர் ‘இது வேண்டாம் வேறு சுருபங்கள் அதாவது மாதா படம் அல்லது புனிதர் உருவம் தாங்கிய டாலர் இருந்தால் கொடுங்கள்’ என்றார். [2017-03-01 00:12:27]

எழுத்துருவாக்கம்:அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின்மன்னிப்பது தெய்வீகம்இறைஇயேசுவில் பிரியமானவர்களே! நம்மை பக்குவப்படுத்தி மனிதர்களை கடவுளாக மாற்றும் காலம் தொடங்கிவிட்டது. தவக்காலம் தந்தைக்குரிய பாசத்தோடு நம்மை வரவேற்கிறது. இக்காலத்தில் பீடத்திலே நாம் அதிகமாக பூக்கள் வைப்பது கிடையாது. காரணம் ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் இருக்கும் பூவை கடவுளுக்கு அர்ப்பணிக்க அழைக்கிறது. [2017-03-01 00:12:27]

எழுத்துருவாக்கம்:அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின்

Holy Land Rosary Sorrowful Mysteries


2017-06-25

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

தாழ்மை


2017-06-25

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2017-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! வேறு இடங்களில் நான் உங்களிடம் வந்தது போன்று, இங்கும் நான் உங்களை செபிக்குமாறு அழைக்கிறேன். எனது மகனை அறியாதவர்களுக்கும், இறைவனின் அன்பைத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கும், பாவங்களுக்கு எதிராகவும் செபியுங்கள். அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்காக - எவரை எனது மகன் அழைத்துள்ளாரோ அவர்களுக்காகவும், இதன்மூலம் உங்களுக்கு அன்பும், ஆவியின் சக்தியும் கிடைக்க செபியுங்கள். எனது மகனிடம் செபியுங்கள், அவரின் அருகில் அனுபவிக்கும் அன்பு, உங்களுக்கு சக்தியைத் தருவதுடன், அன்புச் செயல்களுக்கு...
2017-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எல்லாம் வல்லவர், நான் உங்களை மீண்டும் புதிதாக மனம்திரும்ப அழைக்க அனுமதித்துள்ளார். எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் இதயத்தை நீங்கள் அனைவரும் எதற்காக அழைக்கப்பட்டுள்ளீர்களோ, அந்த இரக்கத்திற்காகத் திறவுங்கள். அமைதியில்லாத உலகில் சமாதானத்திற்கும் அன்புக்கும் சாட்சிகளாக இருங்கள். இவ்வுலகில் உங்கள் வாழ்வு நிலையற்றது. செபியுங்கள், நீங்கள் செபிப்பதன் ஊடாக வானகத்தையும் அதன் பரிசுத்த நிலையையும் உணரமுடியும், அத்துடன் உங்கள் இதயம் அனைத்தையும் வித்தியாசமானவைகளாகக் கண்டுகொள்ளும். நீங்கள் தனியாக...
2017-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை செபிக்க அழைக்கிறேன், என்னிடம் கேட்பதற்காக அல்ல, மாறாக தியாகச் செயல்கள் புரிவதற்காக - உங்களைத் தியாகம் செய்வதற்காக அழைக்கிறேன். உண்மையையும் இரக்கமுள்ள அன்பையும் வெளிப்படுத்த நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் இதயத்தில் விசுவாசம் தொடர்ந்தும் குறைந்து செல்லாமல் இருக்க, நான் எனது மகனிடம் செபிக்கிறேன். இறைத் தூயஆவியால் உங்களுக்கு உதவிபுரியுமாறு அவரை வேண்டுவதுடன், நானும் அன்னையாகிய எனது ஆசீரால் உங்களுக்கு உதவிபுரிவேன். எனது பிள்ளைகளே,...


திருவெளிப்பாட்டு ஆண்டு 2016/2017

27/11/2016-26/11/2017


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

ETR வானொலியில் யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் வானொலி நிகழ்வு

தினமும் காலை 7:45மணி முதல் 8:05 மணி வரை

இவ் நாளந்த நற்சிந்தனை எமது இணையத்தில் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரை உங்கள் ஆசீர்வாத்ததிற்காக ஒலிபரப்பாகின்றது. கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் அறிவியுங்கள்.

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
(யோவான் 3:16)

ஆவியின் அருட்கொடைகள்

தூய ஆவியார் ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவுசெறிந்த சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் அருள் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், அப்பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவற்றை அருளுகிறார்.
(1கொரிந்தியர் 12:8-10)