இன்று திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (30-11-2014)

விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்...
எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது/>


திருப்பலி முன்னுரை

இறைமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்று மிகச் சிறப்பான முறையில் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். மூன்றாண்டு சுழற்சியில் நிகழும் திருவழிபாட்டு ஆண்டு அட்டவணையின் இரண்டாவது ஆண்டை ஆரம்பிக்கிறோம். இன்றைய ஞாயிறு கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறாக நாம் தொடங்குகிறோம். நாம் தொடங்கியிருக்கும் இக்காலம் புதிய எண்ணங்களோடும் உந்துதலோடும் நாம் இறைமுறைச் செல்களில் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபட்டு நமக்கு இது மீட்பின் காலமாகிடவும் நாம் உலகுக்கு ஒளியேற்றி வாழ வழிவகுப்போம்.

நம்முடைய நற்செயல்கள், முன்மாதிரிகையான வாழ்கை ஆகியவற்றின் வழியாக கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்று, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காக நம்பிக்கையோடும், தூய வாழ்வோடும் காத்திருக்கும் நமக்கு அருள்கொடை எதிலும் குறைவே இல்லை என்பதும், நாம் எல்லா வகையிலும் செல்வர்களாவோம் என்னும் நற்செய்தியும் இன்று நமக்கு வழங்கப்படுகின்றது. எப்பொழுதும் கடவுளைச் சந்திக்கத் தயாராய் இருக்கவேண்டும், நமது பாவ வாழ்வை ஏற்றுக் கொண்டு மனமாற்றத்திற்கான வழிகளைத் கண்டடைய வேண்டும் என்ற சிந்தனைகளும், நமக்குத் தரப்படுகின்றன. இந்தச் சிந்தனைகளை நாம் நம் மனத்தில் ஆழமாகப் பதித்து, ஆண்டவரே நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே, எங்கள் பாவங்களிலிருந்து எம்மை விடுவித்து, புனித பாதையில் வழி நடக்க வரம் தாரும் என்று இத் திருப்பலி வழியாகச் செபிப்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்திலே இஸ்ராயேல் மக்கள் தாங்கள் செய்த குற்றங்களை கடவுள் முன் ஏற்று பாவ மன்னிப்பு கேட்கிறார்கள். நாமும் பல வேளைகளில் நம்முடைய பலவீனங்களாலும், சுயநலன்களாலும் இஸ்ராயேல் மக்களைப் போல் தவறுகள் செய்து கொண்டிருக்கிறோம். எனவே அவர்களைப் போல் மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம் என்ற உறுதியுடன் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்

உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16-17; 64: 1,3-8

ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து `எம் மீட்பர்' என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதும் இல்லை. கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர். இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
திருப்பாடல் 80: 1,2. 14-15. 17-18

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2 உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

இன்னறய இரண்டாம் வாசகத்தில் இயேசுவைப் பற்றி அறிக்கையிடும் அனைவருக்கும் அவரின் அன்பும், ஆசீரும், அருளும், அமைதியும் உரித்தாகும் என்று புனித பவுல் கூறுகிறார். நம் குறைகளைக் களைந்து இறைமகன் இயேசு கிறிஸ்துவோடு இணைந்திட, வாழ்ந்திட இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

சகோதரர் சகோதரிகளே, நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர்; ஒன்று முளைக்கச் செய்வேன். எரே.33:15

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இஸ்ரயேலின் ஆயரும், கேருபுகளின் மீது வீற்றிருப்பவருமான ஆண்டவரே!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : அவர்கள் விழிப்போடும், ஞானத்தோடும் இருந்து இன்றைய உலகில் உலாவரும் அனைத்துத் தீமைகளையும் சரியான முறையிலே இனங்கண்டு, அவற்றை முறியடிக்கும் விசுவாசக் காவலர்களாகத் துலங்கிட அவர்களுக்கு வேண்டிய அருள் வரங்களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தந்தையான ஆண்டவரே இறைவா!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. என்னும் உண்மையை ஏற்றுக்கொண்டு எமது பாவ வழிகளை விட்டு விலகி உமது விருப்பப்படி வாழும் அருள் வரங்களை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உறவின் ஊற்றே இறைவா!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும் , உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அமைதியான நீர்நிலைகளுக்கு எங்களை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!

இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காகவும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும் சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நோயாளரின் ஆரோக்கியமே இறைவா!

உலக நாடு முழுவதும் பரவிவரும் பல்வேறுபட்ட கொடிய நோய்கள் நோய்கள் இல்லாதொழியவும், இயற்கையாகவும், மனிதராலும் உருவாக்கப்படும் எல்லா அழிவுகளும் இல்லாது போகவும்: மக்கள் அனைவரும் உம்முடைய குரலுக்கே செவிகொடுத்து, உம்மைப் பின்பற்றி வாழவும் அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கிறிஸ்துவே எங்கள் அரசரே!

எமது பங்குத்தந்தையை ஆசீர்வதியும். அவர் உமது பணிக்காக எடுக்கும் அனைத்து முயற்சியிலும் உமது தூய ஆவியின் துணையை கொடுத்து, வெற்றியினை கொடுத்தருளும். உமது தெய்வீக ஆற்றலால் நல்ல உடல் சுகத்தோடு உமக்காக இறைபணியாற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்... எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மாற்கு 13:35)

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும். பயணம் செல்லவிருக்கின்ற வீட்டுத் தலைவர் தம் பணியாளர்களிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். அவர் எந்த நேரத்திலும் வீடு திரும்பக் கூடும். அவர் வருகின்ற வேளையில் பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நன்முறையில் ஆற்றுகின்றனரா எனப் பார்ப்பார். விழிப்பாயிருக்கின்ற பணியாளரே பொறுப்பானவராகவும் செயல்பட்டுத் தம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.

வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புத் தேவை. விழிப்பு என்பது வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு உதவும்; வருகின்ற சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளப் பயன்படும்; தடைகளைக் கண்டு தளர்ந்து போகாமல் அவற்றைத் தாண்டிச் செல்கின்ற வலிமையை நமக்குத் தரும். எனவே, விழித்திருப்போர் பொறுப்பான விதத்தில் செயல்படுகின்ற மனிதராக விளங்குவர். இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற விழிப்பு அவரிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட பொறுப்பை முழுமனதோடு ஏற்று நடைமுறைப்படுத்துவதில் நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க நமக்கு உந்துதல் தர வேண்டும். விழித்திருப்போர் தூக்க மயக்கத்தில் இருக்கமாட்டார்கள் (காண்க: மாற்கு 13:36). அவர்களுடைய இதயம் மழுங்கிய நிலையில் இருக்காது. மாறாக, விழித்திருப்போர் தம் இதயத்தைக் கடவுளுக்குத் திறந்து வைப்பார்கள்; அவர்களது இதயத்தில் கடவுள் நுழைந்திட யாதொரு தடையும் இருக்காது. எந்த நேரத்தில் கடவுள் அவர்களைத் தேடி வந்தாலும் அவர்கள் தங்கள் இதயக் கதவுகளைத் திறந்துவிட உடனடியாக முன்வருவார்கள். எனவே, இயேசு நம்மைப் பார்த்து, ''நான் உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்'' என அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பு நமக்கு விடுக்கப்படுகின்ற ஒரு சவால் கூட

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் விழிப்பாயிருந்து உம் வரவை எதிர்கொள்ள அருள்தாரும்