யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-11-12

(இன்றைய வாசகங்கள்: சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16 ,திபா 63: 1. 2-3. 4-5. 6-7,திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18 ,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13)




உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்., உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்., உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்., உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்., உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்., உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.,


திருப்பலி முன்னுரை

படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார். யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும், நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ள நம் இறைத்தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பெதுக்காலம் முப்பத்திரெண்டாம் ஞாயிறு தினத்தில், இலாத்தரன் போராலய நேர்ந்தளிப்பு விழா திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில். இதுவே இன்று நம்மைச் சிந்திக்கவும், செயற்படவும் அழைக்கும் இறைச் செய்தியாக இருக்கின்றது. மேலும், எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன், என்னும் இறைவார்த்தைகள், நாம் கடவுளை என்றும் மகிமைப்படுத்தவே அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றன.

கடவுளுடைய கோவில் என்னும் உயர் நிலையைப் பெற்றுள்ள நாம், நமது உடலாகிய ஆலயத்தைப் பாவம், தீமை, பிரிவினை போன்ற அழுக் குகளால் நிரப்பி, அதனைக் குப்பைத் தொட்டியாக்கி விடாது தூய்மை யான வாழ்வு வாழ நம்மை நேர்மையான உள்ளத்தோடு அர்ப்பணித்த வர்களாய் இத் திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம்.



முதல் வாசகம்

ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16

ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர். தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
திபா 63: 1. 2-3. 4-5. 6-7

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

6 நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். 7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18

சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம். கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: ``விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், `இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, `எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, `உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது' என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, `ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள். அவர் மறுமொழியாக, `உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.'' இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ள தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள்,அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் அனைவரும்: தமது உடல், உள்ளம், உணர்வுகள் அனைத்தையும் தூய்மையாகப் பேணிக்காத்து, அன்பு, இரக்கம், சாந்தகுணம், கரிசனை போன்ற நற்பண்பகளால் தம்மை நிரப்பி உம்மை மாட்சிப்படுத்தும் நல்லுள்ளத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வைகறைதோறும் எமக்கு துணையாக இருக்கும் தந்தையே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும், எம் உடல் உமது ஆவி யார் தங்கும் ஆலயம் என்னும் உண்மையை ஆழமாக உணரவும், எமது உடலை நற்ப்பணபுகளால் நிரப்பி, தூய்மையான வாழ்வு வாழவும் வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இடுக்கணுற்ற வேளைகளில் எமக்கு உற்ற துணையாக இருக்கும் தந்தையே இறைவா!

உலகின் பல இடங்களிலும் வன்முறைக்கும், கொடுமைக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாகித் தவிக்கும் அனைத்து கத்தோலிக்க மக்களுக்காகவும், ஏனைய மக்களுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம். எல்லா விதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா நலன்களையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா,

நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்டு துன்புறுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உயிர்களுக்கு உயிர் கொடுக்கும் அன்புத் தந்தையே!

நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும், பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து, ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா!

எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்துக் கடவுளின் பார்வையில் மாசற்றச் சமயவாழ்வு வாழவும், நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நிலைக்கு ஏற்பச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, உலகத்தால் கறைபடாதபடி எம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

7. எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா!

எங்கும் நல்ல மழையைக் கொடுத்த இதே வேளையில் இயற்கை அழிவுகளால், இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகளால் உண்டான துன்பங்களாலும் பெரும் அவதிப்படும் முதியோர்களையும், குழந்தைகளையும், வீடு, பொருள் இழந்தோர் அனைவரையும் நோய்நொடியிலிருந்தும், பொருளாதரச் சரிவிலிருந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' (யோவான் 2:16)

தொன்றுதொட்டே மக்கள் தாங்கள் வழிபடும் கடவுளுக்குக் கோவில்கள் எழுப்பிச் சிறப்பித்துள்ளனர். இஸ்ரயேல் மக்கள் எருசலேமில் கோவில் அமைத்து யாவே கடவுளை வழிபட்டனர். உண்மையிலேயே கடவுள் உறைகின்ற இல்லமாக அக்கோவில் அமைந்தது. இயேசு எருசலேம் கோவிலுக்குப் பலமுறை சென்றிருக்க வேண்டும். ஒருநாள் அவர் கோவிலுக்குச் செல்லும் வேளையில் அங்கு விரும்பத்தகாத செயல்கள் நிகழ்வதைக் காண்கிறார். ஆடுமாடுகளையும் புறாக்களையும் விற்கின்றவர்கள் ஒருபக்கம், நாணயம் மாற்றுவதில் ஈடுபடுவோர் மறுபக்கம் என்று கோவிலில் ஒரே சந்தடி நிலவுகிறது. கடவுளை வழிபடுவதற்கு என ஒதுக்கப்பட்ட இடம் ஒரு சந்தைக் கூடம் போல மாறிவிட்டதை இயேசு கடிந்துகொள்கிறார்: ''என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' (யோவான் 2:16) என்று கூறி, இயேசு கோவிலிலிருந்து எல்லாரையும் துரத்தியடிக்கின்றார்.

இயேசுவின் இச்செயலை விமர்சிக்கும் சிலர் இயேசு வன்முறையில் ஈடுபட்டார் எனவும், தேவைப்பட்டால் வன்முறையில் நாமும் ஈடுபடலாம் எனவும் வாதாடுவர். ஆனால் வன்முறை என்றால் பிறருடைய உயிருக்கோ உடைமைக்கோ அழிவு கொணர்வது என நாம் பொருள்கொண்டால் இயேசு அத்தகைய வன்முறையில் ஈடுபடவில்லை. என்றாலும், கடவுளின் இல்லம் கள்வர் குகைபோல் ஆவதையும் இயேசு அனுமதிக்கவில்லை. எனவே, இயேசு கண்டிப்போடு செயல்பட்டார் என்பதில் ஐயமில்லை. இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் இயேசு தம் உடலைக் கோவிலுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் (காண்க: யோவான் 2:21). இயேசுவிடத்தில் கடவுள் குடிகொண்டிருந்தார் என்பதே இதன் பொருள். கடவுள் தம் சாயலாக நம்மை உருவாக்கியிருக்கின்றார். எனவே நாம் அனைவரும் கடவுளின் இல்லம், கடவுள் உறைகின்ற கோவில். தூய பவுல் இவ்வுண்மையை அழகாக எடுத்துரைக்கிறார்: ''நீங்கள் கடவுளுடைய கோவிலென்று...உங்களுக்குத் தெரியாதா?'' (1 கொரி 3:16). கடவுளின் கோவிலாக மனிதர் உள்ளனர் என்னும் உண்மை ஆழமானது. மனிதருக்கு நாம் தீங்கிழைக்கும்போது கடவுளையே பழிக்கிறோம் எனலாம். மனிதர் கடவுளின் அன்புப் படைப்புக்கள் என்னும் உண்மையை நாம் ஏற்று அதற்கேற்ப மனிதரை மதித்து நடந்தால் கடவுளுக்கே மாட்சி அளிக்கின்றோம். கோவில் என்பது கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டடம் மட்டும் அல்ல, உயிருள்ள மனிதரே கடவுள் உறையும் இல்லமாக உள்ளனர் என்பதை உணர்வோர் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிலவுகின்ற நெருங்கிய உறவைப் புரிந்துகொள்வர்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்கள் இதயங்களில் வாழ்கின்றீர் என்பதை ஆழ உணர்ந்திட அருள்தாரும்.