இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு.

2012-11-02


தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர்.

 என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளி விடமாட்டேன்  என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளி விடமாட்டேன்




திருப்பலி முன்னுரை


கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே!!
ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை;!
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! துன்பத் திகிலைத் தூக்கி எறிந்துவிட்டு. என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடும்: விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டா ட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் இறந்த விசுவாசிகள் அனைவரையும் நினைந்து அவர்களுக்காக மன்றாடுவதற்காக ஒன்று கூடியுள்ளோம்.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவரையும் அழிய விடாமல் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்யவேண் டுமென்பதே கடவுளின் திருவுளம் என்னும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கை கிறிஸ்து உறுதிப்படுத்துகின் றார். அதாவது நம் அனைவருக்கும் உயிர்ப்பு நிட்சயம் என்பதே இன்றைய செய்தியாகின்றது.
எனவே நாம் இந்த உறுதி மொழியை ஆழமாக விசுவசித்து, அவரிடமே நம்பிக்கை கொண்டு, மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.


முதல் வாசகம்


இவரே நம் கடவுள்: இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்: இவர் நம்மை விடுவிப்பார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 25:6-9

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்: அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடி கட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடி யுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்: பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகி லைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்: என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்: தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம் மண்ணுலகில் அகற்றிவிடுவார்: ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.
அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: இவரே நம் கடவுள்: இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்: இவர் நம் மை விடுவிப்பார்: இவரே ஆண்டவர்: இவருக்காகவே நாம் காத்திருந்தோம்: இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


பல்லவி: ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை.

ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை.பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய் வார்அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்: பல்லவி
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்: மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்: உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறு மணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்: நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி


இரண்டாம் வாசகம்


நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.
முதல்வாசகத்திற்கு பதில் அளிக்கின்றவகையில் இன்றைய இரண்டாம் வாசகம் அமைகின்றது.


திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 5: 5-11

எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது: எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவு ளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?
நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவு ளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழி யாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அது மட்டும் அல்ல, இப்போது கடவு ளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உற வுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


2திமொ. 1:10
அல்லேலூயா, நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 37-40
தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளி விடமாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்;ல, என்னை அனுப்பியவரின் விருப் பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவ ரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் என்று கூறினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

1. நல் ஆயனாம் அன்புத் தந்தையே இறைவா! உம்முடைய பணியைத் தொடர்ந்தாற்றி இறந்துபோன எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவருக்கும் நித்திய இளைப் பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா! இறந்து போன அனை த்து ஆன்மாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

3. அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா! எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அடிமை நிலையை மாற்றிவிடும் தந்தையே இறைவா! உலக நாடுகள் அனைத்திலும் பல்வேறு அடிமை த்தனத்திற்குள் அகப்பட்டு துன்பங்களை அனுபவித்து வரும் அனைவருக்கும் மகிழ்வும், அமைதியும், சுதந் திரமும் நிறைந்த வாழ்வை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.