என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.
(லூக்கா 22:30)

ஏனோக்கு

ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.
(ஆதியாகமம் 5:22-24)

நோவா

தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்.
(ஆதியாகமம் 6:9)


அருட்பணி.போல் றொபின்சன் அவர்களை தொடர்புகொள்ள

Rev.Fr.Paul Robinson
Diocese of Trincomalee
Sri Lanka
Mobile: 0094-777-855755
Email: frpaulroby1@yahoo.com/@gmail.com

அருட் தந்தை.போல் றொபின்சன் பாடிய பாடல்கள்




திருப்பலிகளும் குணமாக்கல் வழிபாடுகளும்



திருப்பலியும் குணமாக்கல் வழிபாடும் வூப்பெற்றால் யேர்மனி 2014



திருப்பலியும் குணமாக்கல் வழிபாடும் லேவகூசன் யேர்மனி 2011

குணமாக்கல் வழிபாடு, கனடா - 2006

இயேசு கடவுளின் மகன்


English Holy Mass


திருப்பலி 2007



சிறப்பு நற்செய்தி கூட்டம்



திருப்பலி மட்டக்களப்பு



திருப்பலி 2006 ஜூலை



திருப்பலியும் குணமாக்கல் வழிபாடும் - 2006 டிசம்பர்



திருப்பலி 2008 ஓகஸ்ட்



திருப்பலியும் குணமாக்கல் வழிபாடும் வூப்பெற்றால் யேர்மனி 2011



நற்செய்தி கடவுளின் மகிமை

நன்றி: புதுவாழ்வு நற்செய்தி குழுவினர், கனடா


நேர்காணல் - அருட் தந்தை.போல் றொபின்சன்

உங்களைப்பற்றி உங்களுடைய சுய அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

எனது பெயர் போல் ரொபின்சன் என்னுடைய பெற்றோர் உறவுகள் சொந்தங்கள் எல்லாம் கண்டிப்பகுதியைச் சேர்ந்தவர்கள். என்னுடைய தகப்பனார் இராணுவத்தில் பணிபுரிந்தார். அதனால் அவரின் பணிப்பொறுப்பு காரணமாக நாமும் திருகோணமலையில் வாழ்ந்தோம். திருகோணமலையில் தான் என்னுடைய ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தேன். அதற்குப்பிறகு தமிழ்மொழிக்கு மாறி என்னுடைய கல்வியை திருகோணமலையில் பாதிக்கல்வியும், அதன்பிறகு 83ம் ஆண்டு யூலை கலவரத்தில் நாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்கிற விதத்தில் எல்லாவற்றையும் இழந்த நிலையில், வாழ்ந்த இடத்தை விட்டு பாலையூற்று என்னும் கிராமத்திற்கு வந்தோம்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்நகரின் தாழையடிப்பகுதியில் குருவானவரின் உதவியுடன் சில காலங்கள் அங்கிருந்து 84ம் ஆண்டு திருகோணமலைக்கு வந்து 85ம் ஆண்டு சிறிய குருமடம் சேர்ந்தேன். சிறிய குருமடத்தில்தான் என்னுடைய O/L, A/L படிப்புகள் எல்லாம் முடிந்த பின்பு 91ம் ஆண்டு கண்டி தேசிய குருமடத்தில் என்னுடைய குருத்துவ கல்வியை ஆரம்பித்தேன். 98ம் ஆண்டு என் கல்வியை முடித்து 98ம் ஆண்டு 8ம் மாதம், 18ம் திகதி குருவாக திருநிலைப்படுத்தப்பட்டேன். குருவாக வந்த முதல் ஆண்டு என்னுடைய மறை மாவட்டத்திலே அக்கறைப்பற்று என்னும் இடத்தில் 2ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதன்பிறகு இப்போது புனித யூதாதேயு திருத்தலம் தேற்றாத்தீவு என்னும் இடத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.



தொடர்ந்து உங்களுடைய பணிவாழ்வ பற்றி சுருக்கமா கூறுங்கள்?

நான் குருவாய் வந்த நாளிலிருந்தே, என்மனதிலே, என்னை அறியாமலே இளமைப் பருவத்திலே அதிகம் ஆண்டவருடைய கல்வாரித் திருப்பலியிலே அதிக பக்தியும் என்மனதிலே ஏற்பட்டது. என்னுடைய தனிப்பட்ட ஆன்மீக வாழ்வில் நான் வளர்ச்சியடைவதற்கு அது உதவியாக இருந்தது மட்டுமல்ல இதே இந்த ஆன்மீகத்தையும் இந்த இறைவார்த்தையினுடைய தாகத்தையும் அடுத்தவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்கிற உந்துதலும் ஆர்வமும் என்மனதிலே ஆண்டவர் கொடுத்தார். எனவேதான் அந்த பணிவாழ்க்கையில் ஒரு குருவாகப் பணியைச் செய்தாலும் அந்த இறைவார்த்தைப் பணிக்கென்றும், ஆண்டவருடைய நற்செய்தியை பரப்பும் பணியிலே அதிக ஆர்வத்தை என்னுடைய நேரத்தை அதிகமாக அதில் செலவழிக்க என் உள்மனம் தூண்டியது.

என்னுடைய மறை மாவட்டத்திலே குருவாய் வந்த முதல் ஆண்டிலே அதை ஆரம்பித்தேன். விஷேசமாக தேற்தாத்தீவு திருத்தலத்திற்கு நான் ஆயரால் அங்கு பணிக்கப்பட்ட பின்பு இன்னும் அதிகமாக குறிப்பாக முதன்மையாக இளைஞர்களை மையப்படுத்தி இளைஞர்களை ஆண்டவருக்குள் வைத்திருக்க ஆண்டவருக்குள் கொண்டுவர இளம் வயதினரை, இளம் குடும்பங்களை கிறிஸ்துவுக்குள் வாழவைக்க வேண்டும் அந்த இறைவார்த்தையை அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற துடிப்பு எனக்குள் வந்தது. அதை ஒரு பணியாக செய்து வருகிறேன். இது தவிர என்னுடைய மறைமாவட்டத்திலே நற்செய்திப் பணிக்குழு, அரும்கொடை மறுமலர்ச்சிக்குழு இவற்றிற்கு இயக்குனராக இருக்கிறேன். இது தவிர கல்முனை, அம்பாறை என்கிற கோட்டங்கள் என்னுடைய மாவட்டத்திலே 3மறைக் கோட்டங்கள் இருக்கின்றன. இந்த கோட்டத்திலே குரு முதல்வராகவும் பணியாற்றி வருகிறேன். இது எனக்கென்று கொடுக்கப்பட்டிருக்கின்ற திருத்தலம் பங்கு திருச்சபை, அதற்கு இன்னும் நான்கு ஆலயங்கள் இருக்கிறது. கிளைப் பங்குகளாக இன்னும் 5சிறிய ஆலயங்கள் இருக்கின்றன. இத்திருத்தலத்திலிருந்து என் நற்செய்திப் பணியை செய்து கொண்டிருக்கிறேன். கூடுதலாக தியானங்கள் உரைகள் வழியாக இளைஞர்களுக்கு விசேட தியானங்களை ஒழுங்கு செய்து இறைவார்த்தைக்குள் அவர்களை வாழ வைக்கவும் ஆர்வமுள்ளவர்களை குறிப்பாக பொதுநிலையினரை 2ம் வத்திக்கான் சங்கத்தினுடைய ஒரு துடிப்பு என்று சொல்ல வேண்டும். பொதுநிலையினரை ஊழியத்தில் ஈடுபடுத்துவது திருச்சபைக்குள் பொதுநிலையினரை நற்செய்திப் பணிக்கென்று பாவிப்பது பயன்படுத்துவது. அவர்களை பயிற்றுவிப்பது என்கிற துடிப்பு 2ம் வத்திக்கான் சங்கம் எழுத்துகளில் தெளிவாக இருக்கிறது. எனவே நானும் அதை மனதிலே வைத்து என்னுடைய மறை மாவட்டத்திலே பொதுநிலையினரை நற்செய்தியில் ஆர்வமுடையவர்கள், துடிப்புள்ளவர்கள், வாஞ்சையுள்ளவர்கள் ஆகவும் அதைக் கற்றுக்கொள்ளுகிற தெளிவும், திறமையும் உள்ளவர்களை எடுத்து, பல வழிகளில் பயிற்சிளைக் கொடுத்து அவர்களை மறைமாவட்டத்தில் அல்லது மறைமாவட்டத்திற்கு வெளியிலும் கூட தமிழ் மறைமாவட்டங்களில் விசேடமாக நற்செய்திப் பணியை வளர்க்க, நற்செய்திப் பணிசெய்ய இவர்களை நான் பாவித்து வருகிறேன்.

எனவே என்னுடைய எதிர்கால கனவு ஆசை எல்லாமே இந்த இறைவார்த்தைப் பணியிலே கூடுதலாக இன்னும் குருக்கள் கூட தங்களை அர்ப்பணித்து நற்செய்தியைப் பரப்பும் பணியிலே அதிக ஆர்வம் காட்டவேண்டும். அதே நேரத்தில் பொதுநிலையிரை வளர்த்து திருச்சபை பொதுநிலையினருக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களையும் பரிசுத்த பாப்பரசர் 2ம் அருள் சின்னப்பருடைய கனவு விருப்பம் எல்லாம் பொதுநிலையினரும் நற்செய்திப் பணியில் ஈடுபடவேண்டும். அதை ஒரு விவேகமாக, விருப்பமாக மனதிலே பதியவைத்து அதையும் செய்து வருகிறேன். அது தவிர மறை மாவட்டத்திலே கூடுதலான இடங்களிலே இந்த நற்செய்தி பணியை செய்து வருகிறேன்.

நன்றி: சுவிஸ் ஆன்மீகப்பணியகம்